×

சேலத்தில் வாகன சோதனையின்போது போலீசார் மினிலாரியை பறித்ததால் நடுரோட்டில் தீக்குளித்த போதை டிரைவர்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சேலம்: போதையில் ஓட்டிவந்த மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்ததால், மனமுடைந்த டிரைவர் அங்கேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சேலம் மாநகர போக்குவரத்து எஸ்.ஐ. கிட்டு மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், மினி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக போக்குவரத்து போலீசார் அந்த மினிலாரியை மடக்கி நிறுத்தினர். அதை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர், சேலம் அமானி கொண்டலாம்பட்டி புதூர் ரோட்டை சேர்ந்த சந்தோஷ் (29) என்றும், இளநீர் வியாபாரம் செய்வதாகவும் கூறினார். அப்போது சந்தோஷ் குடிபோதையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், போதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் மினி லாரியை கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அபராதத்தை கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துச்செல்லும்படி கூறிவிட்டனர். இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு கொண்டலாம்பட்டி ரவுண்டாவுக்கு வந்து நடுரோட்டியிலேயே தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் சந்தோஷ் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினார். பொதுமக்கள் இதைபார்த்து அதிர்ச்சியடைந்தனர். வாகன தணிக்கையில் இருந்த போலீசார் சுமார் 200 அடி தூரத்தில்தான் இருந்தனர். அவர்கள் ஓடிவந்து பொதுமக்கள் உதவியுடன், தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த சந்தோஷை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 80 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ளதால் அவரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. …

The post சேலத்தில் வாகன சோதனையின்போது போலீசார் மினிலாரியை பறித்ததால் நடுரோட்டில் தீக்குளித்த போதை டிரைவர்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Nadurode ,Salem ,Government Hospital ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...