×

சாய் தரம் தேஜின் இசை வீடியோ ராம்சரண் வெளியிட்டார்

ஐதராபாத்: சாய் தரம் தேஜ், ‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதி ரெட்டி இணைந்து நடித்துள்ள ‘சத்யாவின் ஆத்மா’ என்ற மியூசிக் வீடியோவை நவீன் விஜய் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இதை ராம் சரண் வெளியிட்டார். சமுத்திரக்கனி இயக்கத்தில திரைக்கு வந்த ‘ப்ரோ’ என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு சாய் தரம் தேஜ் நடித்துள்ள மியூசிக் வீடியோவுக்கு ‘சத்யாவின் ஆத்மா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மியூசிக் வீடியோ, நாட்டின் மீது கொண்ட அன்புக்காகவும், நாட்டை காப்பதற்காகவும் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளை சித்தரித்துள்ளது.

இதுகுறித்து சாய் தரம் தேஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘விதி அதன் மேஜிக்கை மீண்டும் நிரூபித்துவிட்டது. எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும் எங்கள் நட்பின் அடையாளமாக இருப்பவர், இப்போது நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘தி சோல் ஆஃப் சத்யா’ என்ற பாடலை வெளியிடுகிறார். இந்த அற்புதமான மனிதரை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் மற்றும் எங்கள் மியூசிக் வீடியோவை வெளியிட்டதற்கும் ராம் சரணுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். விவேக் ரவி தமிழில் எழுதியுள்ள இப்பாடலை ஸ்ருதி ரஞ்சனி பாடி இசை அமைத்துள்ளார். தில் ராஜூ புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ‘கீழ் பாலகம்’ என்ற படத்தை தயாரித்த ஹர்ஷித் ரெட்டி, ஹன்சிதா ரெட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.

The post சாய் தரம் தேஜின் இசை வீடியோ ராம்சரண் வெளியிட்டார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ramcharan ,Sai ,Hyderabad ,Sai Dharam Tej ,Swathi Reddy ,Naveen Vijay Krishna ,Ram Charan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஸ்ரீ ஸாயி கராவலம்பம்!