×

6 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பிரசார நடைபயணம்: சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ தூரத்திற்கு ரூ.3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக, ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பெரியபாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 2013 சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 மடங்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ரவி, நிர்வாகிகள் ராஜி, வாசுதேவன், பழனி, சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன் சிறப்புரையாற்றினார்.இதில், 22ம் தேதி ஆலப்பாக்கம் முதல் ஊத்துக்கோட்டை வரையில் பிரசார நடைபயணம் மேற்கொள்வது, ஏப்ரல் முதல் வாரத்தில் தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

The post 6 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பிரசார நடைபயணம்: சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Thachur ,Tiruvallur district ,Chittoor ,Andhra ,Sangha ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...