×

பிரபாஸ் ஜோடியாகிறார் நிதி அகர்வால்

ஐதராபாத்: பான் இந்தியா படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார் நிதி அகர்வால். பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ஆதிபுருஷ் படம் வெளியானது. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தையும் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி படத்தையும் பிரபாஸ் முடிக்க இருக்கிறார். இதில் சலார் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்நிலையில் ராஜா டீலக்ஸ் என்ற பான் இந்தியா படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் மாருதி கூறுகையில், ‘எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். விரைவில் படப்பிடிப்புத் தளத்தில் நாம் சந்திக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, கடந்த 17ம் தேதி நிதி அகர்வால் பிறந்தநாள் என்பதால், அவரை வாழ்த்திப் பதிவிட்டிருந்த மாருதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘பூமி’, சிம்பு ஜோடியாக ‘ஈஸ்வரன்’, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘ஹரிஹர வீரமல்லு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ படத்தின் மூலம் முதல்முறையாக பிரபாஸுடன் இணைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post பிரபாஸ் ஜோடியாகிறார் நிதி அகர்வால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nithi Aggarwal ,Prabhas ,Hyderabad ,Pan India ,Prashant Neel ,Kalki ,Nag Ashwin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சலார் டிரெய்லர் வெளியானது