×

சசிகலா வருகை எதிரொலி: இன்று மாலை 5 மணிக்கு ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: நாளை மறுநாள் சசிகலா தமிழகம் வரவுள்ள நிலையில் ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் இன்று மாலை ஆலோசனை நடத்தகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. சிறை தண்டனை மற்றும் மருத்துவபரிசோதனையை முடித்து சசிகலா பெங்களூருவில் உள்ள தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வருகிற 8-ஆம் தேதி திங்கள்கிழமை சசிகலா சென்னை வரவுள்ளார். எனவே அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர், பேனர்கள் வைத்தனர். மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக பேனர்கள் வைத்தவர்களை கட்சியில் இருந்து நீக்கி தலைமை கழகம் அறிவித்தது. …

The post சசிகலா வருகை எதிரொலி: இன்று மாலை 5 மணிக்கு ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sasikala ,echo ,EPS ,Chennai ,Tamil Nadu ,E.P.S. ,Rayapetta, Chennai ,Dinakaran ,
× RELATED கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!