×

சென்னை ஆவடி ஓ.சி.எப். மைதானத்தில் நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 10 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னை: ஆவடி அருகே இரட்டை கொலை வழக்கில் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.  இந்த கொடூர இரட்டைக்கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆவடி மசூதி தெருவைச் சேர்ந்த அசாருதீன் (வயது 30) மற்றும் ஆவடி கவுரிபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் (30) என்பது தெரியவந்தது. அதனையடுத்து, இருவரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசரணையில், தற்போது  மணிகண்டன் உள்பட 10 பேரை கைது செய்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர். …

The post சென்னை ஆவடி ஓ.சி.எப். மைதானத்தில் நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 10 பேரை கைது செய்தது காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Avadi OCF ,Avadi ,Chennai Aavadi O.C.F. Police ,Maidan ,
× RELATED ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த...