×

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா?: மக்களவையில் எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி

டெல்லி: தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டி.ஆர்.பாலு பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவிக்கிறேன் என திமுக எம்.பி.யும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு மக்களவையில் பேசினார். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார். ரஷ்யாவில் உள்ள கல்லூரிகளில் அதே பாடத்திட்டம் உள்ளதால் கல்வியை அங்கு தொடர அனுமதிக்கலாம் என கோரிக்கை வைத்தார்.  தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது முறையல்ல எனவும் கூறினார். பழைய வட்டி விகிதத்தை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை தொடர்வதில் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையை தீர்க்க பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ மாணவர்கள் மீண்டும் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்கு செல்வதும், படிப்பை தொடருவதும் நடைமுறையில் சாத்தியமில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது….

The post உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா?: மக்களவையில் எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Ukraine ,Russia ,M. B. D. R. ,Delhi ,Modi ,Chief Minister ,Stalin ,D. R. ,Palu ,M. B. D. R. Palu ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...