×

பெரம்பலூர்- துறையூர் சாலையில் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தில் கல்லூரி மாணவர்கள்-கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் துறையூர் சாலையில் குரும்பலூர் அருகே பெரம்பலூர்அரசு கலை அறிவியல் கல்லூரி இயங் கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகளாக இ யங்கி வந்தக் கல்லூரி கட ந்த பிப்ரவரி 23ம்தேதி முதல் இயங்கி வருகிறது.குறிப்பாக காலையில் 7 கலைப் பிரிவு வகுப்புகளுக்கும் மதியம் 7 அறிவியல் பிரிவு வகுப்புகளுக்கும் பட் ட வகுப்புகள் நடந்து வருகிறது. இதற்காக காலையில் சுமார் 900 மாணவ மாணவியரும், மதியம் சுமார் 600மாணவ மாணவியரும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.இதில் காலையில் 8.45 மணிக்குத் தொடங்கும் கல் லூரி வகுப்புகளுக்கு காலையில் 7.40 மணிக்கு தீரன் பஸ்சும், 8.15மணிக்கு டவுன் பஸ்சும் மட்டுமே பஸ் பாஸ் செல்லுபடியாகக் கூ டிய பஸ்களாகும். இடையே நாமக்கல், கோவை செல்ல க்கூடிய தீரன் பஸ்கள் பாஸ்களை ஏற்றுவதில்லை. இதனால் 7.40, 8.15 பஸ்களை மட்டுமே நம்பி காலையில் பெரம்பலூரிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் 2 பஸ்களில் தவிர்க்க முடியாமல் கல்லூ ரிக்கு வர வேண்டியுள்ளதால் தினமும் பஸ்சுக்கு 20மா ணவர்கள் படிகளில் தொங் கிக் கொண்டு ஆபத்தான நிலையில் வந்து (நொந்து) செல்கின்றனர்.இதேபோல் மதியம் அறிவி யல் பட்டவகுப்புகளுக்கு சரியாக 1.10 மணிக்குக் கல்லூரி தொடங்குவதால் பெரம்ப லூரில் இருந்து 12.15மணி க்குப் புறப்படும் டவுன் பஸ் மற்றும் 12.30மணிக்குச் செ ல்லும் தீரன் பஸ்சில் மட்டு மே பாஸ் செல்லுபடியாகும்.12.20 மணிக்கு நாமக்கல் பஸ் சாதாரணக் கட்டணத் தை வசூலித்தாலும் அதில் பாஸ் ஏற்பதில்லை. இந்த பஸ்சில்தான் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவ லர்கள் சிலர் வந்து செல்லு கின்றனர். இதனால் 12.15 மற்றும் 12.30 பஸ்களின் படி களில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு ஆபத்தான நி லையில் குரும்பலூர் நோக்கிப் பயணித்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் நே ரும் முன்பாக மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம செ லுத்தி கல்லூரி தொடங்கி, முடியும் நேரங்களில் மட்டு மாவது அரசு டவுன்பஸ்கள்கூடுதலாக இயக்கி விபத் தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல் லூரி மாணவர்கள், பெற் றோர்கள், பேராசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுப் போக்குவரத்துக்கழ கத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்….

The post பெரம்பலூர்- துறையூர் சாலையில் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தில் கல்லூரி மாணவர்கள்-கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Perambalur- ,Dharayur ,Perambalur ,Perambalur Government College of Arts and Sciences ,Kurumbalur ,Dhartiyur ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...