×

விடுமுறையில் ஏராளமானோர் குவிந்தனர் ஏலகிரிக்கு ஆந்திரா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்ைட அடுத்த ஏலகிரிமலையில் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. ஒவ்வொரு வளைவிலும் தமிழ் புலவர்கள் கொடை வள்ளல்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவு சாலைகளிலும் ஆங்காங்கே சுற்றுலாப்பயணிகள் நின்று மலையிலிருந்து கீழ்ப்பகுதியில் உள்ள இடங்களை கண்டு ரசிக்க பார்வை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இயற்கை அழகை ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, முருகன் கோயில், நிலாவூர் கதவ நாச்சி அம்மன் கோயில் உள்ளிட்ட தனியாருக்கு சொந்தமான பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் சென்னை, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இங்குள்ள சிறுவர் பூங்கா, படகுத்துறைகளில் சுற்றுலாப்பயணிகள் தங்களது குடும்பத்துடன் கண்டு தரிசித்து படகில் சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.  சிறுவர் பூங்காவில் பல்வேறு பொழுதுபோக்கு கூடங்கள் சிதலமடைந்து உடைந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடி விளையாட உபகரணங்களை சீரமைக்க வேண்டும். இங்கு  மான், பாம்பு, முயல், முதலை உள்ளிட்ட பல்வேறு பண்ணைகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post விடுமுறையில் ஏராளமானோர் குவிந்தனர் ஏலகிரிக்கு ஆந்திரா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Karnataka ,Elagiri ,Jollarpet ,Elakrimalaya ,Kondai Injek ,Elagrimal ,Dinakaran ,
× RELATED மழைக்காலம் துவக்கம், நோய் தாக்கும்...