×

தண்ணீரின்றி கருகும் பயிர்களால் மலைவாழ் விவசாயிகள் வேதனை மலைக்கிராமத்தில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்-ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர்  அடுத்த  பீஞ்சமந்தை  ஊராட்சிக்கு  உட்பட்ட குடிகம், ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு  என  70க்கும்  மேற்பட்ட  மலை  கிராமங்களில்  5  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில்,  மலை  பகுதியில்  உள்ள  விவசாயிகள்  ஏற்கனவே  மேடு,  பள்ளங்களாக  இருந்த  பட்டா  நிலத்தில்  பயிர்  செய்யாமல்  இருந்து  வந்தனர்.  ஆனால்  தற்போது  நிலைமை  மாறி  பட்டா  நிலங்களை  சமன்  செய்து  பயிர்  செய்து  வருகின்றனர். கடந்த,  அக்டோபர்,  நவம்பர்  மாதங்களில்  பெய்த  கனமழையால்  மலைகளில்  உள்ள  ஓடைகளில்  தண்ணீர்  பெருக்கெடுத்து  ஓடியது.  இதனை  நம்பி  மலைவாழ்  விவசாயிகள்  கரும்பு,  நெல்,  பூச்செடிகள், கிழங்கு  வகை  போன்ற  பயிர்கள்  வைத்துள்ளனர்.ஆனால்,  கோடை  காலம்  தொடங்கி  தற்போது  வெயில்  கொளுத்தி  வருவதால்  ஓடைகளில்  தண்ணீர்  நின்று  விட்டது.  இதனால்  பயிர்கள்  காய்ந்து  கருகி  வருகிறது. இதனை  பார்க்கும்  விவசாயிகள்  கண்ணீர்  வடித்து  வருகின்றனர்.மலை பகுதிகளில்  ஒரு  சில  இடங்களில்  திறந்தவெளி  கிணறுகள்  உள்ளது.  ஆனால்  ஆழம்  குறைவாக  உள்ளதால்  கிணற்று  நீரையும்  நம்பி  பயிர்  செய்ய  முடியாத  சூழ்நிலையில்  விவசாயிகள்  உள்ளனர்.இந்நிலையில், பீஞ்சமந்தை,  ஜார்தான்கொல்லை  போன்ற  மலைவாழ் மக்கள்  கடந்த  சில  நாட்களுக்கு  முன்  பட்டா  நிலத்தில்  ஆழ்துளை  கிணறு  அமைக்க  போர்வெல்  வாகனத்தை  அழைத்து  வந்தனர்.  ஆனால்  இதனை  பார்த்த  வனத்துறையினர்  மாவட்ட  வன  அலுவலர்  அனுமதி  இல்லாமல்  மலை  பகுதியில்  ஆழ்துளை  கிணறு  அமைக்க கூடாது  என்று  தடுத்து  நிறுத்தினர்.இதற்கு,  மலைவாழ்  விவசாயிகள்,  பொதுமக்களும்  பட்டா  நிலத்தில்  ஆழ்துளை  கிணறு அமைக்க  வருவாய்த்  துறை  மற்றும்  ஊராட்சி  நிர்வாகத்திடம்  அனுமதி  வாங்கி  உள்ளோம்  என்றனர். ஆனால்,  மலை  பகுதியில்  ஆழ்துளை  கிணறு அமைக்க  கண்டிப்பாக  மாவட்ட  வன  அலுவலரின்  அனுமதி  வேண்டும்,  இல்லை  என்றால்  கிணறு  அமைக்க  விடமாட்டோம் என்று  போர்வெல்  வாகனத்தை  திருப்பி  அனுப்பி  விட்டனர்.இதனால், மலைவாழ்  விவசாயிகள்  தண்ணீரின்றி  கருகி  வரும்  பயிர்களை  பார்த்து  செய்வதறியாமல்  திகைத்து  நிற்கின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட  துறை  சார்ந்த  அதிகாரிகள்  இதில்  உரிய  நடவடிக்கை  எடுத்து  பட்டா  நிலத்தில்  மட்டுமின்றி  வருங்கால  சந்ததியினர்  பயன்  பெரும்  வகையில்  மலை  பகுதிகளில்  ஆங்காங்கே  ஆழ்துளை  கிணறு  அமைத்து  மலைவாழ்  மக்களின்  வாழ்வாதாரத்தை  உயர்த்த  வழிவகை  செய்ய  வேண்டும்  என்பதே  அனைவரது  எதிர்பார்ப்பாகும்….

The post தண்ணீரின்றி கருகும் பயிர்களால் மலைவாழ் விவசாயிகள் வேதனை மலைக்கிராமத்தில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்-ஒடுகத்தூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : -Odugattur ,Odugattur ,Dudigum ,Jhardangol ,Palambatu ,Phalambatu ,Pinjamanthai ,Wilder-Odugattur ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு; பஸ்...