×

படப்பிடிப்பில் சஞ்சய் தத் காயம்

பாங்காக்: சஞ்சய் தத் தற்போது தென்னிந்திய சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யுடன் ‘லியோ’ படத்திலும் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியுடன் ‘டபுள் ஸ்மார்ட்’ படத்திலும் நடித்து வருகிறார். ‘டபுள் ஸ்மார்ட்’ படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் படப்பிடிப்பில் சஞ்சய் தத் விபத்தில் சிக்கினார். சண்டைக் காட்சியில் நடித்தபோது, சஞ்சய் தத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் நாடு திரும்பியுள்ளார். ‘டபுள் ஸ்மார்ட்’ படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘லைகர்’ படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடித்திருந்தனர். ‘டபுள் ஸ்மார்ட்’, சஞ்சய் தத்தின் முதல் தெலுங்கு படமாகும். ‘கேஜிஎஃப் அத்தியாயம் 2’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அவர் பணியாற்றினார். இப்போது தெலுங்கிலும் ‘லியோ’ மூலம் தமிழிலும் அவர் அறிமுகமாகிறார்.

The post படப்பிடிப்பில் சஞ்சய் தத் காயம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sanjay Dutt ,BANGKOK ,Vijay ,Ram Pothineni ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா