கீவ்: அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ப்ரென்ட் ரெனாட் என்பவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் 3வது வாரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ப்ரென்ட் ரெனாட் என்பவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். உக்ரைனின் இர்பின் என்ற நகரில் ப்ரென்ட் ரெனாட் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காயமடைந்த இரு செய்தியாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான ப்ரென்ட் ரெனாட் உடலில் நியூயார்க் டைம்ஸ் அடையாள அட்டை இருந்துள்ளது. இதையடுத்து அவர் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் என்பது உறுதியானது. இதையடுத்து நியூயார்க் டைம்ஸ் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தில் பிரென்ட் ரெனாட் பங்களிப்பாளராக பணியாற்றியதாகவும், அவர் உக்ரைனில் பணி அமர்த்தப்படவில்லை என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ரஷ்ய ராணுவமே காரணம் என்று உக்ரைன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….
The post உக்ரைனில் செய்தி சேகரித்த போது அமெரிக்க செய்தியாளர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.