×

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி பிலிகுண்டுலுவில் 100 நாள் தொடர் உண்ணாவிரதம்: விவசாயிகள் சங்கம் முடிவு

திருச்சி: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவில்  நேற்றுமுன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கும். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டே மேகதாது திட்ட பணிகள் தொடங்கப்படும் என கூறியுள்ளார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தேசிய தென்னிந்தி நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், 1892ல் கர்நாடகாவில் 90ஆயிரம் ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. அப்போது தமிழகத்தில் 35 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு இருந்தது. 1974க்கு பிறகு கர்நாடகாவில் சாகுபடி பரப்பு விரிந்து  30லட்சமானது. ஆனால் தமிழகத்தில் 12லட்சமாக குறைந்துள்ளது. காவிரியில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் சாகுபடி வெறும் 90 ஆயிரம் ஏக்கராகும். கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க தமிழகத்தை பாஜ பலிகொடுத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்தும், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தியும் நாளை திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையான  பிலிகுண்டுலுவில் 100 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்….

The post மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி பிலிகுண்டுலுவில் 100 நாள் தொடர் உண்ணாவிரதம்: விவசாயிகள் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Piligundulu ,Karnataka ,Meghadatu ,Trichy ,Karnataka government ,Pilikundulu ,Farmers' Union ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் தமிழக எல்லையான...