×

வீட்டு வேலை செய்யாததால் தாய் கண்டிப்பு கூவத்தில் குதித்து மகள் தற்கொலை

ஆவடி: பட்டாபிராமில் வீட்டு வேலைகளை செய்யாததை தாய் கண்டித்ததால் மகள் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பட்டாபிராம் அணைக்கட்டுசேரி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி(19). 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெற்றோருக்கு உறுதுணையாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாவித்திரி வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரை தாய் மீனாட்சி கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சாவித்திரி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர், அவர் வீடு இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.இதற்கிடையில், அணைக்கட்டுசேரி பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் சாவித்திரி உடல் மிதந்து கொண்டிருப்பதாக ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கிய சாவித்திரியின் சடலத்தை கைப்பற்றினர். இதன் பிறகு, பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்படி இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வீட்டு வேலைகளை செய்யாததை, தாய் மீனாட்சி கண்டித்ததால், சாவித்திரி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….

The post வீட்டு வேலை செய்யாததால் தாய் கண்டிப்பு கூவத்தில் குதித்து மகள் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Kouvam ,Pattabram ,
× RELATED பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில்...