×

பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பகவந்த்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் பகவந்த் சிங் மான், ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பஞ்சாப்பில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலின் போதே, இக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் சிங் மான் அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்றதும் நேற்று முன்தினம் டெல்லி சென்று, கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். பின்னர், பஞ்சாப் திரும்பிய அவர் நேற்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர், ஆளுநர் மாளிகைக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில், ‘ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினேன். வரும் 16ம் தேதி மதியம் 12.30க்கு, பகத்சிங் பிறந்த கட்கர்கலான் கிராமத்தில் பதவியேற்பு விழா நடக்கும். இதில் பங்கேற்கும்படி அனைத்து பஞ்சாப் மக்களையும் அழைக்கிறேன்,’’ என்றார்.* வரலாற்று சிறப்புமிக்க அமைச்சரவை அமையும்அமைச்சர்கள் நியமனம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பகவந்த் மான், ‘‘நல்ல அமைச்சரவை அமைக்கப்படும். இதில், வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும். அமைச்சர் பதவிக்கு யாரும் போட்டி போடக்கூடாது. பதவி கிடைக்காதவர்கள் தொகுதி பணியில் கவனம் செலுத்த வேண்டும்,’’ என்றார்.* போதையில் தள்ளாடியவர்பஞ்சாப் முதல்வராக உள்ள பகவந்த் மான், கடந்த 2014 மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு எம்பி.யானார். அப்போது அவர் பெரும் குடிகாரராக இருந்தார். மக்களவைக்கு குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி வருவார். இவர் அருகில் அமர்ந்திருந்த எம்பி ஒருவர், மதுபான நாற்றம் தாங்காமல் தனது இருக்கையை மாற்றும்படி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த ஒரு சம்பவமும் நடந்தது உண்டு. பொது இடங்களில் தனது ஆதரவாளர்களுடன் போதையில் தள்ளாடியபடி செல்வார். தேசிய ஊடகங்களில் இவரின் செய்தி பரபரப்பாக வெளியான காலம் உண்டு. இப்போது இவர் மதுபான பழக்கத்தை முற்றிலும் விட்டு, திருந்தி விட்டார். அதோடு, நிதானத்துக்கு திரும்பிய அவர் பஞ்சாப் முதல்வராகவும் பதவியேற்க உள்ளார்….

The post பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பகவந்த் appeared first on Dinakaran.

Tags : Bhagavant ,Punjab ,Bhagavant Singh Mann ,Aam Aadmie ,
× RELATED பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்