×

லியோ அர்ஜுனின் வீடியோ வெளியானது

சென்னை: அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி லியோ படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டது. லியோ படத்தில் ஹரால்ட் தாஸ் என்ற வேடத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். நேற்றுமுன்தினம் அர்ஜுனின் பிறந்தநாள். இதனால், அவரது கதாப்பாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. அர்ஜுன் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். 41 விநாடிகளுக்கு வெளியாகியுள்ள அந்த வீடியோவில் அர்ஜுன் கேங்ஸ்டராகவும் ஒருவரின் கையை அவர் வெட்டுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் மாஸ் காட்டுகிறார் என கமென்ட் செய்துள்ளனர். லியோ படம் வெளியாவதற்கு இன்னும் 67 நாட்களே உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் பதிவு ஒன்றை வெளியிட்டது. லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அக்டோபர் 19ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

The post லியோ அர்ஜுனின் வீடியோ வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Leo Arjun ,CHENNAI ,Arjun ,Leo ,Harald Das ,Arjun… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை...