×

சமந்தாவிடம் நெருக்கம் காட்டும் விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: தெலுங்கில் சமந்தா நடித்திருக்கும் படம் குஷி. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா – விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளனர். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 2வது படமாகும். இதற்குமுன் மகாநட்டி படத்தில் இவர்கள் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஷி வருகிற செப்டம்பர் 1ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், நேற்றுமுன்தினம் இப்படத்தின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதில் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் மிகவும் நெருக்கமாக ரொமான்டிகாக நடனம் ஆடினர். அப்போது சமந்தாவை அலேக்காக தூக்கி மேடையை சுற்றி சுற்றி வந்தார் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது முதலே சமந்தாவிடம் விஜய் தேவரகொண்டா அதிக நெருக்கம் காட்டி வருவதாக பேச்சு எழுந்துள்ளது. இந்த சமயத்தில் மேடையில் இதுபோல் இருவரும் ஆடிப்பாடிய காட்சியை பார்த்த நெட்டிசன்கள், ம்ம்… பலே. ஜோடி பொருத்தம் பிரமாதம் என சமந்தாவையும் விஜய் தேவரகொண்டாவையும் உசுப்பேற்றி வருகிறார்கள். சமந்தாவை விட இரண்டு வயது குறைந்தவர் விஜய தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

The post சமந்தாவிடம் நெருக்கம் காட்டும் விஜய் தேவரகொண்டா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Devarakonda ,Samantha ,Hyderabad ,Siva Nirvana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா