×

மகளிர் தின விழா

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஒன்றியத்தில் உள்ள 44  பணித்தள கிராமங்களில் ஐஆர்சிடிஎஸ் தொண்டு பாலின சமத்துவம், பெண்களுக்கான சமவாய்ப்பு ஆகிய  கருத்துகளை வலியுறுத்தி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விழிப்புணர்வு கூட்டங்கள், பெண்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டன. குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்தும், பெண் தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் உருவாக்குதல் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் திருவூர், தமிழ்நாடு விவசாய பல்கலை கழக திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சாந்தி, ஊராட்சி தலைவர்கள் லலிதா, மேனகா, சுகுணா, தில்லைகுமார், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், உள்பட  பலர் கலந்துகொண்டனர். …

The post மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Women's Day Celebration ,Tiruvallur ,IRCTS ,Bundi Union ,International Women's Day ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை