×

திருநின்றவூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நீதியரசர் ஜோதிமணி ஆய்வு

ஆவடி: திருநின்றவூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதியரசர் ஜோதிமணி நேற்று மதியம் ஆய்வு செய்தார். திருநின்றவூர் பிரகாஷ் நகரில் உள்ள உர தயாரிப்பு கூடத்தில் நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டார். மேலும், உர தயாரிப்பு கூடத்தை மேம்படுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். இதனை தொடர்ந்து, திருநின்றவூர் நகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதில்,  திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது குறித்து,  கவுன்சிலர்களிடம் நீதியரசர் ஜோதிமணி விளக்கினார். மேலும் கவுன்சிலர்களிடம் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் சசிகலா, மண்டல பொறியாளர் கருப்பையா ராஜு, நகராட்சி தலைவர் உஷாராணி ரவி, துணைத்தலைவர் சரளா நாகராஜ், நகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் துப்புரவு அலுவலர் (பொறுப்பு) ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்….

The post திருநின்றவூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நீதியரசர் ஜோதிமணி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Justice ,Ayothimani ,Thirunanthavur ,Awadi ,State Monitoring Committee of the Green Tribunal for Solid Waste Management of Tamil Nadu ,Thirunandavur ,Justice Astronomy ,Thirunavur ,
× RELATED மக்களவை தேர்தலில் வெற்றிமுகம் கண்ட...