×

திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டு காளைகள் முட்டி 50 பேர் காயம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூரில் உள்ள ஸ்ரீவெள்ளாலகருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொழுவில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 200 காளைகள் பங்கேற்றன. 46 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சிவகங்கை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 700க்கும் மேற்பட்ட காளைகளை, என்.புதூர் பகுதியில் உள்ள கண்மாய், வயல்காட்டு பொட்டல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர்.இதை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த என்.புதூர் மாணிக்கம் (75), மேலூர் தெற்கு தெரு கணேஷ் (20), மத்தினியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு (50), முத்துப்பட்டியை சேர்ந்த சுப்பையா (55), சாத்தனூரை சேர்ந்த ராஜா என்ற ராஜ்குமார் (35) ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மஞ்சுவிரட்டை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் காயம்திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசாமி (52). இவர் நேற்று என்.புதூரில் நடந்த மஞ்சுவிரட்டு பணிக்காக சென்றார். கட்டுமாடு மஞ்சுவிரட்டில் எதிர்பாராதவிதமாக இவரை காளை  முட்டியதில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்….

The post திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டு காளைகள் முட்டி 50 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manjuviratu ,Tiruputhur ,Sivagangai district ,Manchuvirat ,
× RELATED மஞ்சுவிரட்டில் 15 பேர் காயம்