×

பான் இந்தியா படத்தில் நூபுர் சனோன்

ஐதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவிதேஜா நடித்திருக்கும் முதல் பான் இந்தியா படம், ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ளார். இதற்கு முன்பு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’ ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தார். ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. ஆர்.மதி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.

காந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணைந்து தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 20ம் தேதி தசரா பண்டிகைக்கு திரைக்கு வரும் இப்படத்தில் ரவிதேஜா ஜோடியாக நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் நடித்துள்ளனர். இவர்களில் நூபுர் சனோன், பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கிரித்தி சனோன் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பான் இந்தியா படத்தில் நூபுர் சனோன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nubur Sanon ,Pan India ,Hyderabad ,Tiger ,Rao ,Ravideja ,India ,Vamsi ,Abhishek Agarwal ,Abhishek ,Agarwal Arts ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐதராபாத்தில் புற்றுநோய்க்கு என போலி...