×

தனுஷ் ஜோடியாகிறார் ராஷ்மிகா

ஐதராபாத்: சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை ெதலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் ‘ஹேப்பி டேஸ்’, ‘லீடர்’, ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுள்’, ‘ஃபிதா’, ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட ெதலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்க உள்ள புதிய படத்தில்தான் தனுஷ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா தேர்வாகியுள்ளார். இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.  வெங்கடேஸ்வரா சினிமா, அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

 

The post தனுஷ் ஜோடியாகிறார் ராஷ்மிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : dhanush ,rashmika ,Hyderabad ,Sekar Kammula ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் லாக்டவுன் பர்ஸ்ட் லுக் வெளியீடு