×

தாழையம்பட்டு கிராமத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்: பொதுமக்கள் கடும் பாதிப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி தாழையம்பட்டு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதேபகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை செயல்படுகிறது. மேலும், இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட பலர் தினமும் அரசு பஸ் மூலம் சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர். வாலாஜாபாத் – காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள தாழையம்பட்டு கிராம பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நின்று செல்வதில்லை. இதனால், மருத்துவம் உள்பட பல்வேறு அத்தியாவசிய தேவைக்காக செல்லும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, அரசு பஸ்கள் நின்று செல்லாததால், அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவிலும், அவ்வழியாக செல்லும் பைக், வேன் ஆகியவற்றிலும் செல்லும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் அவலநிலையை கருத்தில் கொண்டு, தாழையம்பட்டு கிராமத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தாழையம்பட்டு கிராமத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்: பொதுமக்கள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Walajabad Union ,Varanavasi Navadriti ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!