×

தமிழில் நடிக்க கிரித்தி ஷெட்டி ஆர்வம்

சென்னை: முதலில் இந்தி படத்தில் நடித்து, பிறகு தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர், கிரித்தி ஷெட்டி. தமிழில் என்.லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினேனியின் ஜோடியாக நடித்த ‘தி வாரியர்’, வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவின் ஜோடியாக நடித்த ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் அவர் நடித்து இருந்தார். இரு படங்களும் நேரடியாக ெதலுங்கில் உருவாகி, பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்டவை என்பதால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. முன்னதாக பாலா இயக்கும் ‘வணங் கான்’ என்ற படத்தில், சூர்யா ஜோடியாக சில நாட்கள் நடித்த கிரித்தி ஷெட்டி, திடீரென்று அப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், உடனடியாக அவரும் விலகினார்.

தற்போது தெலுங்கிலும், மலையாளத்தில் நடித்து வரும் கிரித்தி ஷெட்டி, தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ என்ற படத்தில் நடிக்கிறார். நலன் குமாரசாமி இயக்கும் ‘ரத்தத்தின் ரத்தமே’ என்ற படத்தில், கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார். இனிமேல் தொடர்ந்து தமிழில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ள அவர், புது போட்டோசெஷன் நடத்தி, சமூக வலைத்தளங்களில் அந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அைவ வைரலாகியுள்ளன.

The post தமிழில் நடிக்க கிரித்தி ஷெட்டி ஆர்வம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kriti Shetty ,CHENNAI ,N.Lingusamy ,Ram Pothineni ,Nagachaitanya ,Venkat Prabhu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கிருத்தி ஷெட்டி ஃபிட்னெஸ்