×

ராஷ்மிகா, சமந்தா என்ன வித்தியாசம்?: விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: விஜய் தேவர கொண்டா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள பான் இந்தியா படம், ‘குஷி’. ஷிவா நிர்வானா இயக்கி இருக்கிறார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, முரளி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஹிஷாம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி திரைக்கு வரும் இந்்தப் படம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: திருமணம் குறித்தும், குடும்ப அமைப்பின் மதிப்பு குறித்தும் சுவாரஸ்யமான முறையில் இந்தப் படம் பேசுகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இதற்கு முன்பு, பான் இந்தியா முறையில் வெற்றிபெற்ற படங்கள் ஆக்‌ஷன் படங்களாகவே இருந்தன.

இது காதல் படம்தானே என்று பலர் கேட்கிறார்கள். காதல் என்பது நம் அனைவருக்குமான உணர்வு. எனவே, இப்படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும். என் திருமணம் குறித்து கேட்கிறார்கள். இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு பேச்சை எனது அருகில் இருப்பவர்கள் கூட பேசத் தயங்குவார்கள். இப்போது நானே அதைப்பற்றி நிறைய பேசுகிறேன். ராஷ்மிகா மந்தனா, சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்ததில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறார்கள். எந்த அழகான நடிகையுடனும் நான் மகிழ்ச்சியாகவே இணைந்து நடிப்பேன். அதில் எந்தவொரு வித்தியாசத்தையும் பார்ப்பது இல்லை என்பதே உண்மை.

The post ராஷ்மிகா, சமந்தா என்ன வித்தியாசம்?: விஜய் தேவரகொண்டா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rashmika ,Samantha ,Vijay Devarandha ,Hyderabad ,Vijay Deverandra Konda ,Samantha Shiva Nirvana ,Makers ,Murali ,Hisham Abdul Wahhab ,Vijay Devaronda ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமாகி விட்டது: ராஷ்மிகா பேட்டி