×

வேதை அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் கருவை மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

வேதாரண்யம் : வேதாரண்யத்தை தாலுகா கோடியக்காடு கோடியக்கரையில் சுமார் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனவிலங்குசரணாலயம் அமைந்துள்ளது. இந்த பசுமை மாறா காட்டில் வனவிலங்கு புள்ளிமான், வெளிமான், முயல், காட்டுபன்றி, நரி போன்ற விலங்குகள் வசிக்கின்றன. இந்த காட்டில் இயற்கையாகவே பாலா, நாவல், அரசு, ஆலமரம் பூவரசு, உதியன், புங்கன், போன்ற 57 மர வகைகள் உள்ளன. மேலும் 156 வகையான மூலிகைச் செடிகளும் உள்ளன. மேலும் இந்த சரணாலயத்தில் பல்வேறு பட்ட முள் செடிகளும் கருவை மரங்களும் வளர்ந்துள்ளன.இந்த காட்டில் மான்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து புல்வெளியில் மேய்வதற்கு அதிகமான இடங்கள் இருந்தும், இந்த கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் நரிகள், நாய்கள் போன்ற விலங்குகள் அந்தக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்து மேய வரும் மான்களை வேட்டையாடுகிறது. இதை தடுப்பதற்காக வனத்துறையினர் காட்டில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடிவெடுத்து அதன்படி எந்திரங்கள் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் முதல் கட்டமாக 100 ஏக்கரில் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கருவேல மரங்களை அகற்றி விட்டால் வனவிலங்குகள் பாதுகாப்பாகவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமலும் சுதந்திரமாக சுற்றித் திரிய வாய்ப்புண்டு. சுற்றுலாப் பயணிகளும் காட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு இயற்கையாக சுற்றி திரியும் மான்களை கண்டு ரசிக்க முடியும்.கருவை மரங்களை அகற்றும் பணியில் நாகப்பட்டினம் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார்மீனா ஆலோசனைப்படி கோடியக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் வனத்துறையினர் மேற்பார்வையிட்டு பணிகளை செய்து வருகிறார்கள்….

The post வேதை அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் கருவை மரங்கள் அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kodiakar Wildlife Sanctuary of Veda ,Vedaranayam ,Sanctuary ,Vedaranya taluga Godiakadam Godiakaram ,Kodiyakar Wildlife Sanctuary ,Dinakaran ,
× RELATED பெரியாறு புலிகள்...