×

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் பொன்னர் சதம் விளாசல் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை

ஆண்டிகுவா: இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 311 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் 2வதுநாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்திருந்தது.3வதுநாளான நேற்று ஹோல்டர் மேலும் 2 ரன் அடித்து 45 ரன்னில்அவுட் ஆனார். டிசில்வா 32, அல்சரி ஜோசப் 2, கேமர் ரோச் 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர். சிறப்பாக ஆடி சதம் விளாசிய பொன்னர் 123 ரன்னில் லாரன்ஸ் பந்தில் அவுட் ஆனார். நேற்றைய ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 373 ரன் எடுத்திருந்தது. ஒருவிக்கெட் கைவசம் உள்ள நிலையில் வெஸ்ட்இண்டீஸ் 62 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4வதுநாள் ஆட்டம் நடக்கிறது….

The post இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் பொன்னர் சதம் விளாசல் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : West Indies ,England ,Antigua ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...