×

பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு விதிமீறுவோர் மீது நடவடிக்கை: துணை மேயர் மகேஷ்குமார் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் அடிப்படை வசதிக்கான பணியை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் எனவும், விதிமீறலில் யார் ஈடுபட்டிருந்தாலும் நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அடையாறு மண்டலம் 169வது வார்டுக்குட்பட்ட வெங்கடாபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதிகளில்  மழைநீர் வடிகால்கள் அமைப்பது, திடக்கழிவை உடனடியாக அகற்றுவது, தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பையை உடனடியாக அகற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, அரசு பண்ணை அமைந்துள்ள பகுதி மற்றும் ஜோதியம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறும் வகையில் பக்கவாட்டு கால்வாய்களுக்கு மாற்றாக மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சென்னை முழுவதும் மக்களுக்கு குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் அனைத்தும் தரமான முறையில் அமைத்திடவும், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனே அதனை சரி செய்திடவும் வசதியாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இதில், எங்கேனும் விதிமீறல்கள் இருந்தால் யாராக இருந்தாலும் நோட்டீஸ் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் அடுத்தடுத்து பணிகளை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அடையாறு மண்டல செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்….

The post பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு விதிமீறுவோர் மீது நடவடிக்கை: துணை மேயர் மகேஷ்குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Deputy Mayor ,Makeshkumar ,Chennai ,Deputy ,Mayor ,Maheeshkumar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...