×

ரவுடிக்கு வெட்டு

பெரம்பூர்: அயனாவரம் வீராசாமி 3வது தெருவை சேர்ந்தவர் கலை (எ) சதீஷ்குமார்(22). ரவுடி. நேற்று முன்தினம் நண்பர் சிவக்குமாருடன் அயனாவரம்  ராஜி தெரு வழியாக வந்தார். அப்போது பைக்கில் வந்த மூவர் சதீஷ்குமாரை பலமாக வெட்டினர். இதில் அவருக்கு தலை, நெற்றி, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்த அயனாவரம் போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டு சதீஷ்குமாருக்கும், அயனாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடி கிருபானந்தன்(21) தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் சதீஷ்குமாரை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. …

The post ரவுடிக்கு வெட்டு appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Perambur ,Kalai ,Satishkumar ,Ayanavaram Veerasamy 3rd street. ,Ayanavaram ,Sivakumar ,
× RELATED சேலம்: ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்