×

‘தெறி’ ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி

மும்பை: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’.கடந்த 2016ல் திரைக்கு வந்த இதில் சமந்தா, எமி ஜாக்சன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நடிகை மீனாவின் மகள் நைனிகா, மறைந்த இயக்குனர் மகேந்திரன் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. சினி ஒன் ஸ்டுடியோஸ் சார்பில் முராத், அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. காளீஸ் இயக்குகிறார்.

இவர், தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான ‘கீ’ என்ற படத்தை இயக்கியவர். ‘தெறி’ இந்தி ரீமேக்கில் விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவான் நடிக்கிறார். அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். மற்றொரு ஹீரோயினாக வாமிகா கபி நடிக்கிறார். இந்தி நடிகையான அவர், தமிழில் இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

The post ‘தெறி’ ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Keerthy Suresh ,Vamika Gabhi ,Mumbai ,Vijay ,Atlee ,Samantha ,Amy Jackson ,Naan Gaddam ,Rajendran ,Meena ,Nainika ,Mahendran ,GV Prakash ,Kumar… ,Wamika Kabi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிக்கும் அக்கா