×

லட்சுமி மேனனுடன் திருமணமா?: விஷால் பதில்

சென்னை: லட்சுமி மேனனுடன் விஷால் திருமணம் என சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு விஷால் பதிலளித்துள்ளார். விஷால் இப்போது ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த நடிகை அனிஷா ரெட்டிக்கும் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. சில காரணங்களால் இந்த நிச்சயதார்த்தம் முறிந்தது. இதையடுத்து நடிகை அபிநயாவை விஷால் கரம் பிடிக்க உள்ளார் என தகவல் பரவியது. இருவரும் சேர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார்கள். இதை வைத்து இருவருக்கும் திருமணம் என பரவிய தகவலை அபிநயா தரப்பு மறுத்தது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கும் விஷாலுக்கும் திருமணம் என்ற செய்தி கடந்த சில தினங்களாக பரவி வந்தது. இது குறித்து விஷாலிடம் கேட்டபோது, ‘இது பொய்யான தகவல். இதில் சிறிதும் உண்மையில்லை’ என்றார்.

The post லட்சுமி மேனனுடன் திருமணமா?: விஷால் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lakshmi Menon ,Vishal ,Chennai ,Hyderabad ,Anisha Reddy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மார்க் ஆண்டனி படத்திற்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்..!!