×

அந்தகன் படத்தின் ‘என் காதல்’ பாடல் வெளியீடு

சென்னை: ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து, இயக்கியுள்ள படம் அந்தகன். இதில் பிரசாந்த், பிரியா ஆனந்த், கார்த்திக், சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா, சமுத்திரக்கனி, யோகிபாபு, ஊர்வசி, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனங்களை எழுதியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. அந்தாதுன் படம் தேசிய விருதும் வென்றது. அந்தகன் படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் எழுதி, சித்ஸ்ரீராம் பாடிய ‘என் காதல்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது….

The post அந்தகன் படத்தின் ‘என் காதல்’ பாடல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Andagan ,Thiagarajan ,Star Movies ,Prashanth ,Priya Anand ,Karthik ,Simran ,Andhagan ,
× RELATED சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும்...