×

சயின்ஸ் ஃபிக்‌ஷன் லவ் ஸ்டோரியில் நடித்தது ஏன்?: ஜி.வி.பிரகாஷ் குமார்

சென்னை: மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ள படம், ‘அடியே’. இப்படத்தின் டிரைலரை கே.ஈ.ஞானவேல் ராஜா, கார்த்திக் சுப்பராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், சிம்புதேவன், வசந்தபாலன், அருண் மாதேஸ்வரன் இணைந்து வெளியிட்டனர்.‌ ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள ‘அடியே’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கவுரி கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர்ஜே விஜய், வெங்கட் பிரபு நடித்துள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். மல்டிவெர்ஸ் என்ற எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்டிக் ஜானரில் தயாராகியுள்ள இப்படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியதாவது:

‘அடியே’ படத்தின் கதையும், காட்சிகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இது வழக்கமான படம் இல்லை. பியூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்‌ஷன் லவ் ஸ்டோரி. இதை திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சென்னையில் பனி மழை பொழியும் என்று கதையில் இருக்கும். அதை படக்குழு திரையில் நேர்த்தியாக செய்து காட்டியது. படப்பிடிப்பில் வெங்கட் பிரபுவுடன் இசை தொடர்பாக விவாதிப்போம். சமீபத்தில் நான் பணியாற்றியதில் மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்த நாளில், இந்த தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றால் உறுதியாக நடக்கும். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்பதால், மீண்டும் இந்த நிறுவனத்துடன் பணியாற்ற விரும்புகிறேன். நடிப்பைப் பொறுத்தவரை கவுரி கிஷன், மதும்கேஷ் இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர்.

The post சயின்ஸ் ஃபிக்‌ஷன் லவ் ஸ்டோரியில் நடித்தது ஏன்?: ஜி.வி.பிரகாஷ் குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : GV Prakash Kumar ,Chennai ,Prabha Premkumar ,Mali ,Manvi Movie Makers ,KE Gnanavel Raja ,Karthik Subbaraj ,Myshkin ,Venkat Prabhu ,AL Vijay ,Simbudhevan ,Vasanthapalan ,Arun Matheswaran ,G. V.Prakash Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐஸ்வர்யா சிபாரிசு செய்ததால் நடிக்க பயந்தேன்: ஜி.வி.பிரகாஷ்