×

ஆன்லைன் கேமில் பணம் இழந்த வாலிபர் தற்கொலை

ஆற்காடு: ஆற்காடு அருகே ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த சென்னை வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் அருகே தென்கழனி  கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஈடுபாட்டுடன் விளையாடியுள்ளார். இதில் அவர் தான் வைத்திருந்த பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிறரிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டில்  அதையும் இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆன்லைனில் விளையாடுவது பெற்றோருக்கு தெரியவந்ததால் அவரை கண்டித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனவேதனையில் வீட்டிலேயே இருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு மயங்கிய நிலையில் தொங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஆன்லைன் கேமில் பணம் இழந்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Artgad ,Chennai ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது