×

லத்தூர் ஒன்றியம் அணைக்கட்டில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

செய்யூர்: அணைக்கட்டு கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் ஒன்றியம் அணைக்கட்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர்களை நடவு செய்து இருந்தனர். தற்போது, அறுவடை செய்யும் பணியும் நடந்து வருகிறது. அதில், அறுவடை செய்யும் நெல், இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அணைக்கட்டு விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா, அணைக்கட்டில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர், விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதலை  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், காஞ்சி தெற்கு மாவட்ட  துணை செயலாளர் தசரதன், ஒன்றிய துணை செயலாளர் மோகன்ராஜ், அணைக்கட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்மொழிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post லத்தூர் ஒன்றியம் அணைக்கட்டில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Lathur Union Dam ,Deodur ,Dhukakuttu ,Chengalpadu District Dootur ,Paddy ,Purchase Station ,Dinakaran ,
× RELATED செய்யூர் தொகுதியிலுள்ள அனைத்து...