×

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தை பராமரித்த மூதாட்டி ஓய்வு: மகளிர் தினத்தில் பாராட்டு விழா

பூந்தமல்லி: பூந்தமல்லி சீனிவாசாநகர், 4வது தெருவை சேர்ந்தவர் கலைவாணி (60), இவரது கணவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு  இறந்துவிட்டார். இவரது மகன், மகளும்கூட இறந்துவிட்டனர். இந்நிலையில் கலைவாணி, பூந்தமல்லி போலீஸ் நிலையத்தை பராமரிக்கும் வேலையை கடந்த 32 ஆண்டுகளாக செய்துவந்தார். பூந்தமல்லி போலீஸ் நிலைய வளாகத்தை தினந்தோறும் சுத்தம் செய்வதும், போலீசாருக்கு தேவையான பணிகளை செய்துவந்தார். இவர், உலக பெண்கள் தினமான நேற்றுமுன்தினம் ஓய்வுபெற்றார். அவரது பணியை சிறப்பிக்கும் விதமாக பூந்தமல்லி போலீசார், மூதாட்டிக்கு திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தினர். அப்போது அவருக்கு வேண்டிய துணிகள், மளிகைப்பொருட்கள், பாத்திரங்களை பரிசாக கொடுத்தனர்.காவலர்கள் ஓய்வுபெற்றால் அவர்களை போலீஸ் வாகனத்தில் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். அதேபோன்று போலீஸ் நிலைய வளாகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு ஓய்வுபெற்ற மூதாட்டியை இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் மற்றும் மகளிர் போலீசார் தனது போலீஸ் வாகனத்திலேயே வீட்டிற்கு வழியனுப்பி மூதட்டியை கவுரவப்படுத்தினர். இந்த சம்பவம் அந்த மூதாட்டி மற்றும் போலீசாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது….

The post பூந்தமல்லி போலீஸ் நிலையத்தை பராமரித்த மூதாட்டி ஓய்வு: மகளிர் தினத்தில் பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Poonamallee ,Women's Day ,Poontamalli ,Kalaivani ,4th Street, Srinivasanagar, Poontamalli ,Ramakrishnan ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்