×

பைக் திருடிய வேலைக்காரி நண்பருடன் கைது

ஆவடி: திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மகேஷ்(38) ஐ.டி ஊழியர். கடந்த 7ம் தேதி மகேஷ் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் நிறுத்தியிருந்த பைக் மாயமாகியது தெரியவந்தது. புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, மகேஷின் பைக்கை அதே குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வரும் பெண் அண்ணனூர், தங்கவேல் தெருவைச் சார்ந்த ராதா (38) ஒரு வாலிபருடன் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ராதாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராதாவின் ஆண் நண்பர் குமரேசன் (28) என்பவர் என தெரியவந்தது இதனையடுத்து ராதா, குமரேசனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்….

The post பைக் திருடிய வேலைக்காரி நண்பருடன் கைது appeared first on Dinakaran.

Tags : Mahesh ,Thirumullaivayal, Thirumalaivasan Nagar ,
× RELATED எச்.வி.எப் விஜயந்தா மாடல் பள்ளியில்...