×

ஆறு வழிச்சாலைக்காக மண் பரிசோதனையில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி: ஏரியின் நடுவில் பணி நடந்தபோது பரிதாபம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராமலிங்காபுரம் கிராமம் உள்ளது. இங்கு, ஏரியின் நடுவில்  தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை செல்லும் ஆறு வழிச்சாலை அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்ய ஏரியின் நடுவே செல்ல வேண்டும். இதனால், இரும்பு பேரல்களை படகு போல் கட்டி அதில் சென்றபோது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தம்புநாயகன்பட்டி கிராமம், காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுருளிமுத்து (59)  என்ற ஒப்பந்த தொழிலாளி நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார்.அப்போது, அவர் தண்ணீரில் இருந்த பாசிகளில் சிக்கி மூழ்கினார். இதையறிந்த அவருடன் பணிபுரிந்த 6 நபர்கள் அவரை சடலமாக மீட்டனர். பின்னர், அவர் சென்ற இரும்பு படகின் மீது அவரது உடலை கிடத்தினர். அவர் இறந்தது தெரிந்த அவர்கள், பென்னலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த பென்னலூர்பேட்டை எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்றனர். பின்னர், இறந்தவரின் உடல் ஏரியின் நடுவில் 100 மீட்டர் தொலைவில் உள்ளதால் தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த, தீயணைப்பு துறையினர் இறந்தவரின் உடலை மீட்டனர். பின்னர், போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பம் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது….

The post ஆறு வழிச்சாலைக்காக மண் பரிசோதனையில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி: ஏரியின் நடுவில் பணி நடந்தபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Ramalingapuram ,Bennalurpet ,Tachur ,Dinakaran ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...