×

சித்தராமையா வேடத்தில் விஜய் சேதுபதி?

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி பான் இந்தியா படம் உருவாகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த வருடமே தொடங்கியது.  இதில் சித்தராமையா வேடத்தில் நடிக்க கன்னட ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டினர். ஆனால் படத்தின் இயக்குனர் சத்யா ரத்னம், தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிரபலம் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பினார். இதையடுத்து இந்த வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அவர் தேர்வு செய்திருக்கிறார்.

ஆனால் விஜய் சேதுபதி இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவரிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த படத்துக்கு லீடர் ராமையா என தலைப்பு சூட்டியுள்ளனர். இதற்கு டேக்லைனாக ‘ஏ கிங் ரைஸ்ட் பை பிப்புள்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உருவாக்குவதற்காக சித்தராமையாவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கு முன் இயக்குனர் சத்யா ரத்னம் ‘கதலேகானா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். ப்ரீ புரொடக்சனின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சித்தராமையா வேடத்தில் விஜய் சேதுபதி? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Siddaramaiah ,Bengaluru ,Karnataka ,Chief Minister ,Sathya… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி 51 ஷூட்டிங் முடிந்தது