×

விஜய் சேதுபதி படம் டிராப் சேரன் தகவல்

சென்னை: விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப்போவதாக சேரன் கூறியிருந்தார். இதையடுத்து விஜய் சேதுபதி, சேரன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக அவர்கள் சந்திப்பும் நடந்தது. இந்த சந்திப்பு நடந்து 5 வருடம் கடந்துவிட்டது. ஆனால் சேரனும் விஜய் சேதுபதியும் இணைவார்களா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சேரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிருபர்கள், அவரிடம் விஜய் சேதுபதி படம் பற்றி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சேரன், ‘அந்த படம் இயக்க முடியாது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அவர் (விஜய் சேதுபதி) ரொம்ப உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்பட வேண்டும். அது சாத்தியம் கிடையாது. ஒரே சமயத்தில் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். கண்டிப்பாக இன்னும் 10 வருடங்களுக்கு அவரது கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். அதனால் அவரது படத்தை நான் இயக்குவதற்கான வாய்ப்பு இல்லை’ என்றார்.

The post விஜய் சேதுபதி படம் டிராப் சேரன் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Chennai ,Cheran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கல்லூரி மாணவரிடம் ரூ.8.50 லட்சம் பறிமுதல்