×

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணி மும்முரம்

திருவாரூர்,: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி நகரில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி மூலம் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெற்றது. திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா வரும் 15ம் தேதி நடைபெறுகிது. இதனையொட்டி 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்ட இந்த ஆழித்தேர் அலங்கரிக்கும் பணிகள் கடந்த ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்தேரோத்தினையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சாரம், தீயணைப்பு, போலீஸ், பொதுப்பணி மற்றும் மருத்துவ துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நகரின் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி மற்றும் வடக்குவீதி என 4 வீதிகளிலும் ஆழித்தேர் செல்லும் வழியில் சாலையோரங்களில் இருந்து வரும் மரங்களில் கிளைகள் அகற்றும் பணி நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது….

The post திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur Thiagaraja Swamy Temple Azhitherota festival ,Tiruvarur Azhitherota ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...