×

முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

ராமநாதபுரம்,:  ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 82ம் ஆண்டு விழா காப்பு கட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, விக்னேஸ்வ பூஜை, திருமஞ்சன அபிஷேகத்துடன் நேற்று காலை கொடியேற்றப்பட்டு, பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். தினமும் இரவு 8 மணியளவில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இசை, பாராயணம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மார்ச் 18 அன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நொச்சிவயல் ஊரணி கரை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடம், காவடிகள் புறப்பட்டு வழிவிடு முருகன் கோயில் வந்தடைகின்றன. அன்றிரவு பூக்குளி வைபவம் நடைபெற உள்ளது. மார்ச் 19 இரவு வழிவிடு முருகன் வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் செய்துள்ளார். மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம வடிவேல் முருகன், காந்தி நகர் சண்முக ஷடாச்சர முருகன் கோயில் பங்குனி உத்திர விழா காப்பு கட்டுடன் தொடங்கியது. …

The post முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Panguni Uthra Festival Flag Hoisting ,Murugan Temple ,Ramanathapuram ,Pathway ,Vigneswa Puja ,Panguni Utra Festival Flag Hoisting ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்