×

நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி தேங்கி கிடக்கும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள்

திருவாடானை,: திருவெற்றியூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவாடானை வட்டாரத்தில் பாண்டுகுடி, தொண்டி, திருவெற்றியூர், திருவாடானை, நெய்வயல் உட்பட 10 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ள வரிசையின் படி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் லாரிகளில் ஏற்றிச் சென்றால் தான்வெயில் மழை போன்றவற்றில் பாதிப்பு இல்லாமல் நெல்லை பாதுகாக்க முடியும்.திருவொற்றியூரில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வெட்டவெளியில் பாதுகாப்பின்றி கிடைக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெல் மூட்டைகள் தேங்கியிருந்தால் தார்ப்பாய் இல்லாமல் மழை வந்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘அரசு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை லாரிகள் மூலம் மில்களுக்கு எடுத்துச் சென்றால் தான், அடுத்தடுத்து விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய முடியும். ஆனால் இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் லாரிகளில் ஏற்றி செல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விற்பனை செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.மேலும் மழை பெய்தால் நெல் அனைத்தும் முளைத்து வீணாகி விடும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலும் அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். எனவே உடனடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை லாரிகளில் ஏற்றி செல்லவும் தாமதமின்றி விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….

The post நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி தேங்கி கிடக்கும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Tiruvettiyur government ,procurement station ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...