×

வியாபாரத்தில் அசத்தும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆப் கோதா’

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் வருகின்ற ஒனம் பண்டிகையை முன்னிட்டு மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படம் ‘கிங் ஆப் கோதா’. இதில் துல்கர் சல்மான், ஜஸ்வர்யா லஷ்மி, பிரசன்னா, ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் தியேட்டர் பிஸ்னஸ் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தின் ஆந்திரா, தெலுங்கானா உரிமையை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர். கூடுதலாக இதன் உரிமையை ரூ. 2.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். இதுதான் தெலுங்கு சினிமாவில் அதிக விலைக்கு பிஸ்னஸ் ஆன மலையாள படம் என்கிறார்கள்.

The post வியாபாரத்தில் அசத்தும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆப் கோதா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dulquer Salmaan ,Abhilash Joshi ,Onam festival ,Jaswarya Lashmi ,Prasanna ,Ritika Singh ,Charan ,Anika Surendran ,Kollywood Images ,
× RELATED சூர்யா படத்தில் துல்கர், நஸ்ரியா