×

மரக்காணம் அருகே இன்று அதிகாலை திமுக எம்பி மகன் கார் விபத்தில் பலி

விழுப்புரம்: மரக்காணம் அருகே இன்று அதிகாலை சென்டர் மீடியனில் கார் மோதிய விபத்தில் திமுக எம்பி மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையை சேர்ந்தவர் திமுக மாநிலங்களவை எம்பி, என்.ஆர். இளங்கோ. இவரது மகன் ராகேஷ் (30). இவரது நண்பர் வேதவிகாஸ் (29). இவர்கள் இருவரும் நேற்றிரவு இசிஆர் சாலை வழியாக சென்னையில் இருந்து புதுவைக்கு வந்துள்ளனர். காரை ராகேஷ் ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த சென்டர் மீடியனில் கார் மோதி, கவிழ்ந்தது. இதனால் கார்  நொறுங்கியது.இந்த விபத்தில் என்.ஆர்.இளங்கோ மகன் ராகேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் வேதவிகாஸ் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வேதவிகாசை மீட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகேஷ் உடல் காருக்குள் சிக்கிக்கொண்டதால் உடனடியாக மீட்க முடியவில்லை. இதையடுத்து மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, 2 பொக்லைன் இயந்திரம் மூலம், சுமார் 4 மணி நேரம் போராடி காருக்குள் இறந்த நிலையில் சிக்கி கொண்ட ராகேஷ் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மரக்காணம் அருகே இன்று அதிகாலை திமுக எம்பி மகன் கார் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : marakkanam ,dasagagam ,Vilappuram ,Dezagam ,Centre Medion ,Kazhagam ,Marakavam ,
× RELATED விழுப்புரம் அருகே தற்கொலை...