×

அரசு பஸ்கள் மீது கல்வீச்சு : மர்மநபர்களுக்கு வலை

பழநி: பழநியில் அரசு பஸ்கள் மீது கல்வீசி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஓபுளாபுரம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல டெப்போ உள்ளது. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவில் திருப்பூரில் இருந்து பழநி வந்த அரசு, பஸ் பயணிகளை இறக்கி விட்டு டெப்போவிற்கு சென்று கொண்டிருந்தது. சேரன் ஜீவா நகர் பகுதி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத சிலர் பஸ்சின் மீது கற்களை வீசி விட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இது குறித்து பழநி டவுன் காவல் நிலையத்தில் பஸ் டிரைவர் சிவக்குமார்  புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், பஸ்சின் மீது கற்களை வீசி விட்டு தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இதுபோல் பழநி-புதுதாராபுரம் சாலையில் புளியம்பட்டி பகுதியில் திருப்பூரில் இருந்து பழநி நோக்கி வந்த 2 அரசு பஸ்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். 2 சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் ஒரே நபர்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post அரசு பஸ்கள் மீது கல்வீச்சு : மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Palani ,Dindigul National… ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து