×

தனியார் கல்லூரி ஆக்கிரமித்த ரூ.100 கோடி அரசு நிலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் பகுதியில், தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அதிரடியாக  மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் ஊராட்சியில், சர்வே எண் 330/1ல்  அனாதீனம் வகைப்பாட்டை சேர்ந்த அரசுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. இதை  தனியார் கல்லூரி நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தது. இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, காஞ்சிபுரம் டிஆர்ஓ பன்னீர்செல்வம் மேற்பார்வையில், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ சைலேந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு, ஆக்கிரமிப்புகளை  அகற்றி அரசு நிலத்தை மீட்டனர் . சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என கூறப்பபடுகிறது. அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post தனியார் கல்லூரி ஆக்கிரமித்த ரூ.100 கோடி அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sriperumthur ,Private College Administration ,Mevaluarugupam ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஜமாபந்தியில் கடைசி நாளில் 291 மனுக்கள்