×

உலக மகளிர் தினவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் உலக மகளிர் தின விழாவில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப் பை திட்டத்தை வலியுறுத்தி, மகளிர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் உலக மகளிர் தினவிழா நேற்று நடந்தது. பேரூராட்சி துணை தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி உதவி அலுவலர் காமாட்சி வரவேற்றார். இதில், பேரூராட்சி துணை தலைவர் சங்கீதா பேசுகையில், சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு வளர்ச்சியடைவது, சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எவ்வாறு கையாளுவது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், தமிழக அரசு கொண்டு வந்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை, பொதுமக்கள் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில், புதிதாக பொறுப்பேற்ற பெண் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தி கையில் மஞ்சள் பையுடன் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து இதில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதையடுத்து, இளம்பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பிறகு, வேளாண் துறை சார்பில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு 800 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், மருத்துவர் ரம்யாதேவி, தோட்டக்கலை உதவி அலுவலர் கோட்டம்மாள், செவிலியர்கள் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post உலக மகளிர் தினவிழாவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Manjappa ,International Women's Day ,Madhurantagam ,International Women's Day Festival ,Karunkuzhi ,Tamil Nadu Government ,
× RELATED மரகத தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக உற்சவம்