×

ஆண்டிபட்டி அருகே போலி பீடிக்கட்டுகள் பறிமுதல்-தப்பி ஓடியவருக்கு வலை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, போலி பீடிக்கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக டூவீலரில் வந்து தப்பி ஓடியவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயர்களில், போலி பீடிக்கட்டுகளை தயாரித்து விற்பதாக, தனியார் பீடி கம்பெனி மேலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், 4 தனியார் பீடி கம்பெனிகளைச் சேர்ந்த மேலாளர்கள் பழனிவேல் முருகன், கார்த்திக், சங்கர், அவினாஷ் ஆகியோர், ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் பீடிக்கட்டுகளுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். உடனே டூவீலில் வந்தவர், அங்கிருந்து தப்பி ஓடினார். டூவீலரை சோதனை செய்ததில், 19 போலி பீடிக்கட்டு பண்டல்கள், 30 போலி டீ தூள் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.5,790 ரொக்கம் இருந்தது. இது குறித்து தனியார் கம்பெனி மேலாளர்கள் ராஜதானி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி பீடிக்கட்டுகள் விற்பனை செய்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், டூவீலரில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்….

The post ஆண்டிபட்டி அருகே போலி பீடிக்கட்டுகள் பறிமுதல்-தப்பி ஓடியவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Andipati ,Toweilar ,
× RELATED ஆண்டிபட்டி நகரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்