×

காடையாம்பட்டியில் குடிநீர் குழாய் உடைப்பால் மக்கள் அவதி

காடையாம்பட்டி : காடையாம்பட்டியில் குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் தண்ணீருக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. உடைந்த குழாயை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காடையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேட்டூரிலிருந்து மெகா குடிநீர் குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓமலூரில் இருந்து மேச்சேரி வரை செல்லும் பாதை 4 வழிப்பாதையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் வராததால் கிராம மக்கள் திண்டாடி வருகின்றனர். அவ்வப்போது சரி செய்து 15 நாட்களுக்கு ஒரு நாள் மட்டும் தண்ணீர் விடுவதால் ஒரு குடம் தண்ணீருக்காக காலி குடங்களுடன் மணிக்கணக்கில் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். பல்வேறு கிராமங்களில் இதே சூழ்நிலை காணப்படுவதால் உடனடியாக காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யும் பணியை 2 நபர்களிடம் பிரித்து வழங்கியதால், அவர்களிடையே போட்டி காரணமாக சரி வர குடிநீர் விநியோகம் செய்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. போட்டி காரணமாக சின்னத்திருப்பதியில் இருந்து காடையாம்பட்டி வரையிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுவதால் கஞ்சநாயக்கன்பட்டி, புளியமரத்துக்கொட்டாய் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க மணிக்கனக்கில் காத்து கிடக்கின்றனர்….

The post காடையாம்பட்டியில் குடிநீர் குழாய் உடைப்பால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kadiyampatti ,Kadaiyampatti ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…